மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஸ்ரீஜன் சவுத்ரி(17). தெற்கு கொல்கத்தாவில் உள்ள சவுத் பாயிண்ட் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

அவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவரின் குடும்பத்தார் கூறியதாவது,

ஸ்ரீஜன் கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து திகில் படம் பார்த்தார். படம் பார்த்ததில் இருந்து அவர் வித்தியாசமாக நடந்து கொண்டார்.

என்ன ஆனது என்று கேட்டதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. படம் பார்த்த பிறகு அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீஜனுடன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற அவரின் நண்பர்களிடம் விசாரிக்க உள்ளனர் போலீசார்