தேவன்பிட்டி வெள்ளங்குளம் பகுதியில் சக நண்பர்களுடன் ஆற்றைக் கடக்க முற்பட்டபொழுது பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அப்பிரதேச மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தேவன்பிட்டி வெள்ளங்குள பகுதியைச் சேர்ந்த அருள்ஞானம் அருள்விஜிந்தன் நேற்று முன்தினம் சக நண்பர்களுடன் ஆற்றைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தடுக்கி ஆற்றில் விழுந்துள்ளார். பின் அங்கு விரைந்த ஊர் மக்கள் சிறுவனை மீட்டு முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின் அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் இறந்த நிலையிலேயே சிறுவன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறுவனது சடலம் மரண விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து பொலிஸ் விசாரணைக்குப் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது